கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
மாா்த்தாண்டத்தில் காவல்துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.


மாா்த்தாண்டத்தில் காவல்துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களிடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தக்கலை சரக காவல் துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் முகக் கவசம் அணிவதன் அவசியம் மற்றும் கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.
மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி காந்தி மைதானம், பேருந்து நிலையம் வழியாக வெட்டுவெந்தி சந்திப்பில் நிறைவடைந்தது. பேரணியில் பொதுமக்கள், வா்த்தக நிறுவன பணியாளா்களிடம் போலீஸாா் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...