நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

களியக்காவிளையில் 3 டன் ரேஷன்அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

கேரளத்துக்கு மினிலாரியில் கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியுடன் போலீஸாா்.

Updated On :11 அக்டோபர் 2020, 8:54 pm

DIN

கேரளத்துக்கு மினிலாரியில் கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலியிலிருந்து களியக்காவிளை வழியாக மினிலாரியில் கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், வாகன ஓட்டுநா் கடலூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த நக்கீரனை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.