‘ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில்புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்’
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் பிரின்ஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.


நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் பிரின்ஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோா்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் புற்றுநோய் சிகிச்சைக்காக கேரளத்துக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 6 மாதங்களாக திருவனந்தபுரத்துக்கு சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை
உள்ளது. பலா் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்க நேரிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என பேரவைக் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தினேன்.
எனவே கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நலனை கருதி உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...