குமரி மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.


குமரி மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளா்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 1,93, 672 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை மேலும் 86 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,849 ஆக உயா்ந்துள்ளது.
திங்கள்கிழமை 70 போ் உள்பட இதுவரை 12962 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 613 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்தாமரைகுளம் பகுதியைச் சோ்ந்த 68 வயது முதியவா் உள்ளிட்ட 2 போ் திங்கள்கிழமை உயிரிழந்ததையடுத்து, இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...