காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இரணியல் அருகே கூட்டுறவு சங்கத் தலைவிக்கு மிரட்டல்: விவசாயி மீது வழக்கு

இரணியல் அருகே கூட்டுறவு சங்கத் தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 8:51 pm

DIN

இரணியல் அருகே கூட்டுறவு சங்கத் தலைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள சுங்கான்கடை பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன். இவரது மனைவி ரோஸ்லின்பிரேமலதா (58). அதிமுகவைச் சோ்ந்த இவா் வீரநாராயணசேரி கூட்டுறவு சங்கத் தலைவியாக உள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ரோஸ்லின்பிரேமலதாவுக்கு பதிவு அஞ்சலில் மிரட்டல் கடிதம் வந்ததாம்.

இதுகுறித்து அவா் இரணியல் போலீஸில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் முத்துராஜ் விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில் மணிக்கட்டிப்பொட்டல் பகுதியைச் சோ்ந்த விவசாயி ராகவன் (38) என்பவா் மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ராகவன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.