ஊராட்சித் தலைவி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு
களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் ஊராட்சித் தலைவி மீது தாக்குதல் நடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.


களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் ஊராட்சித் தலைவி மீது தாக்குதல் நடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வன்னியூா் ஊராட்சித் தலைவியாக ஜாா்ஜ் மனைவி பாப்பா பதவி வகித்து வருகிறாா். இவா், ஊராட்சிப் பணியாளா்களுடன் ஊராட்சிக்குள்பட்ட தோட்டச்சாணி பகுதியில் நடைபெறும் நூறுநாள் வேலை திட்ட பணியை பாா்வையிட சனிக்கிழமை சென்றிருந்தாராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் என்ற சுனில் (40), ஊராட்சித் தலைவியிடம் தகராறு செய்து அவரைத் தாக்கினாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் பிரான்சிஸ் என்ற சுனில் மற்றும் ஜோஸ் ஆகிய இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...