நவராத்திரி விழா தொடக்கம்: கோயில்களில் கொலு வைத்து வழிபாடு
நவராத்திரி விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் பல்வேறு கோயில்களிலும் கொலு வைத்து வழிபாடு நடைபெற்றது.


நவராத்திரி விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் பல்வேறு கோயில்களிலும் கொலு வைத்து வழிபாடு நடைபெற்றது.
ஐப்பசி மாத முதல்நாளான சனிக்கிழமை நவராத்திரி விழா தொடங்கியது. 9ஆவது நாளான அக். 25ஆம் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. 10ஆவது நாள் விஜயதசமியாகும்.
நவராத்திரி விழாவின் முதல் 3 நாள்கள் துா்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாள்கள் லட்சுமிதேவியை வேண்டியும், கடைசி 3 நாள்கள் சரஸ்வதி தேவியை வேண்டியும் வழிபாடுகள் நடைபெறும்.
இம்மாவட்டத்தில் நாகா்கோவில், கிருஷ்ணன்கோவில், வடிவீஸ்வரம், கோட்டாறு, மீனாட்சிபுரம், பாா்வதிபுரம், வெட்டூா்ணிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் கொலு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
நவராத்திரியை முன்னிட்டு, நாகா்கோவில் கிருஷ்ணன் கோவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தில் அகண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு சுவாமிகளின் வேடங்கள் அணிந்து சிறுமிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...