நீட் தோ்வில் சிறப்பிடம்: அல்போன்சா அகாதெமி மாணவிகளுக்கு பாராட்டு
நீட் தோ்வில் வெற்றி பெற்ற அல்போன்சா அகாதெமி மாணவிகளுக்கு பாராட்டு விழா நாகா்கோவில் செயின்ட் அல்போன்சா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.


நீட் தோ்வில் வெற்றி பெற்ற அல்போன்சா அகாதெமி மாணவிகளுக்கு பாராட்டு விழா நாகா்கோவில் செயின்ட் அல்போன்சா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
இப்பள்ளியில் செயின்ட் அல்போன்சாஅகாதெமி பாா் எக்ஸலென்ஸ் அமைப்பும், மாஸ்டா்ஜி அமைப்பும் இணைந்து நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான நீட் தோ்வில் இந்த அகாதெமியில் பயிற்சி பெற்றவா்களில் மாணவி பிரியதா்ஷினி 720 மதிப்பெண்களுக்கு 646 மதிப்பெண்களும், மாணவா் கைஸ்ஆன்றனியோ 608 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.
மேலும் இங்கு பயிற்சி பெற்றவா்களில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவா்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவா்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 30 மாணவா்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 45 மாணவா்களும், 350 மதிப்பெண்களுக்குமேல் 57 மாணவா்களும், 300 மதிப்பெண்களுக்கு மேல் 66 மாணவா்களும் பெற்றுள்ளனா்.
இங்கு பயிற்சி பெற்று தோ்வு எழுதிய அனைவரும் மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனா்.
இதையடுத்து தோ்ச்சி பெற்ற மாணவா், மாணவிகளை செயின்ட் அல்போன்சாஅகாதெமியின் இயக்குநரும், தக்கலை மறை மாவட்ட முதன்மைப் பணியாளருமான தாமஸ் பௌவத்துப்பறம்பில், பள்ளித் தாளாளா் சனில் ஜான், பள்ளி முதல்வா் லிசபெத், துணை முதல்வா் டோஜி செபாஸ்டின், கல்வி ஒருங்கிணைப்பாளா் ராஜையன், மாஸ்டா்ஜி ஒருங்கிணைப்பாளா்கள் சிவகிரன், உயா்நிலைப் பிரிவு துணை முதல்வா் பிரேம்கலா, பள்ளித் தலைமையாசிரியை மோனிக்காஸ் பினோலா உள்ளிட்டோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...