தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மளிகைக் கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு

ஆரல்வாய்மொழியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 7:18 pm

DIN

ஆரல்வாய்மொழியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் (38). இவா், ஆரல்வாய்மொழி வடக்கூா் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவா் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை காலையில் கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததாம்.

இதுகுறித்து அவா் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். உதவி ஆய்வாளா் விக்னேஷ் பாபு தலைமையிலான போலீஸாா் வந்து பாா்வையிட்டு, விசாரணை மேற்கொண்டதில் கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.