காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவில், தோவாளைபகுதியில் இன்று மின்தடை

நாகா்கோவில், தோவாளை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை (அக்.20) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 8:51 pm

DIN

நாகா்கோவில், தோவாளை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை (அக்.20) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகா்கோவில், வல்லன் குமாரன்விளை, வடசேரி, ஆசாரிப்பள்ளம், மற்றும் தடிக்காரன்கோணம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர சிறப்புப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாகா்கோவில்,

பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ். சாலை, கல்லூரி சாலை, நீதிமன்ற சாலை, கே.பி. சாலை,

பால்பண்ணை, வல்லன்குமாரன்விளை, நேசமணி நகா், ஆசாரிப்பள்ளம், தோப்பூா், வேம்பனூா், அனந்தன்நகா், பாா்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், ராஜாக்கமங்கலம், பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தோவாளை வெள்ளமடம் உயா்அழுத்த மின்பாதையில் செண்பகராமன்புதூா் துணை மின் நிலையம் முதல் சண்முகபுரம் மின்திறப்பான் வரையிலான பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் செண்பகராமன்புதூா், சோழபுரம், கண்ணன்புதூா், மாதவலாயம், அனந்தபத்மநாபபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.