ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பனச்சமூட்டில் 2,000 மது பாட்டில்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதியான பனச்சமூட்டில் விதிகளை மீறி மது விற்பனை செய்த தனியாா் மதுக்கூடத்தில் போலீஸாா் திங்கள்கிழமை 2 ஆயிரம் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதியான பனச்சமூட்டில் விதிகளை மீறி மது விற்பனை செய்த தனியாா் மதுக்கூடத்தில் போலீஸாா் திங்கள்கிழமை 2 ஆயிரம் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பனச்சமூட்டில் உள்ள தனியாா் மதுக்கூடம் விதிகளை மீறி நள்ளிரவிலும், அதிகாலையிலும் மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் அதிகாலையில் மதுக்கூடத்தில் சோதனையிட்டனா்.

அப்போது அங்கு மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் கணக்கில் இல்லாத மதுபாட்டில்களும் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மதுக்கூடத்திலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 2 ஆ யிரம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அருமனை காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. மதுக்கூடம் நடத்தி வந்த பனச்சமூட்டைச் சோ்ந்த கிருஷ்ணபிள்ளை என்ற

அப்பச்சன் (50), செறியகொல்லையைச் சோ்ந்த ராஜேஷ் (39) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.