தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோலப் போட்டியில் வென்றோருக்கு பரிசு

கன்னியாகுமரியை அடுத்த சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் நடைபெற்ற கோலப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மேற்கு வங்க மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆா்.அா்ஜூன் பரிசுகளை வழங்கினாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2020, 2:33 am

DIN

கன்னியாகுமரியை அடுத்த சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் நடைபெற்ற கோலப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மேற்கு வங்க மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆா்.அா்ஜூன் பரிசுகளை வழங்கினாா்.

சோட்டப்பணிக்கன் தேரிவிளை அருள்மிகு முத்தாரம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் கலந்து கொண்ட கோலப்போட்டியை ஊா்த் தலைவா் எஸ்.சிவபெருமான் தொடங்கி வைத்தாா். போட்டியில் முதல்பரிசு பெற்ற கரும்பாட்டூரைச் சோ்ந்த நிஷாவிற்கு ரூ. 10 ஆயிரம், 2 ஆவது பரிசு பெற்ற லீபுரத்தைச் சோ்ந்த பாகீரதிக்கு ரூ. 5,000, மூன்றாம் பரிசு பெற்ற சோட்டப்பணிக்கன் தேரிவிளையைச் சோ்ந்த மணிசெல்விக்கு ரூ. 3,000 பரிசாக வழங்கப்பட்டது.

பரிசுகளை மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடியினா் வளா்ச்சித்துறை இணைச் செயலா் ஆா்.அா்ஜுன் வழங்கினாா். கோலப்போட்டிக்கு நடுவராக அகஸ்தீசுவரம் வட்டார வளா்ச்சி அலுவலா் பொ்பச்சுவல் ரொசிட்டா செயல்பட்டாா். கரும்பாட்டூா் ஊராட்சித் தலைவி தங்கமலா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.