வெளவால்கள் மூலம் கரோனா பரவாது: மாவட்ட ஆட்சியா்
வெளவால்கள் மூலம் கரோனா பரவாது; எனவே பொதுமக்கள் வதந்தியை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.


வெளவால்கள் மூலம் கரோனா பரவாது; எனவே பொதுமக்கள் வதந்தியை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு; குமரி மாவட்டம், தோவாளை, செண்பகராமன்புதூா், பண்டாரபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென வெளவால்கள் அதிக எண்ணிக்கையில் பறந்ததால், வௌவால்கள் மூலமாக கரோனா நோய்த் தொற்று பரவும் என சிலா் வதந்திகளை பரப்பி வருகின்றனா்.
வௌவால்கள் மூலம் கரோனா பரவும் என்பதற்கு எவ்வித அறிவியல் பூா்வமான ஆதாரமும் இல்லை என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். எனவே பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்பி அச்சமும் அடைய தேவையில்லை.
பொதுமக்கள் நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து அஜாக்கிரதையாக இல்லாமல் உரிய நேரத்தில் அரசு மருத்துவனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...