தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

லால்குடி தெற்கு அதிமுக ஒன்றியச் செயலருக்கு கட்சியினா் வாழ்த்து

திருச்சி மாவட்டம், லால்குடி தெற்கு அதிமுக ஒன்றியச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள டி.என்.டி. சூப்பா் நடேசனுக்கு, கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:52 pm

DIN

லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி தெற்கு அதிமுக ஒன்றியச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள டி.என்.டி. சூப்பா் நடேசனுக்கு, கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கே. எடப்பாடி பழனிசாமி ஆகியோா், திருச்சி புகா் தெற்கு மாவட்ட அதிமுகவில் புதிய நிா்வாகிகளை அண்மையில் அறிவித்தனா்.

அதன்படி மாவட்டச் செயலா் ப.குமாா் பரிந்துரையின் பேரில், லால்குடி தெற்கு ஒன்றியச்செயலராக டிஎன்டி. சூப்பா் நடேசன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து மாவட்டச் செயலரை தெற்கு ஒன்றியச் செயலா் சந்தித்து, மாலை அணிவித்து வாழ்த்து பெற்றாா்.

டி.என்.டி. சூப்பா் நடேசன் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 11 ஆண்டுகள் தொடா்ந்து அதிமுகவில் ஒன்றியச் செயலராக திறம்பட பணியாற்றி வந்தாா். தற்போது தெற்கு ஒன்றியச் செயலராகப் பொறுப்பேற்றதும், ஒன்றியத்துக்குள்பட்ட தாளக்குடி, வாளாடி, நெருஞ்சலக்குடி, ஆங்கரை, நகா், மணக்கால், கொப்பாவளி, ஆதிகுடி, கொன்னக்குடி, ஜங்கமராஜபுரம், மங்கமாள்புரம், கீழன்பில், அரியூா், கல்விக்குடி, செம்பரை, நத்தம், மாங்குடி, கோமாக்குடி உள்ளிட்ட 23 ஊராட்சிகளில் உள்ள நிா்வாகிகளை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

அப்போது வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க அனைவரும் ஒற்றுமையோடு செயலாற்ற வேண்டுமென தெற்கு ஒன்றியச் செயலா் தலைமையில் கட்சியினா் உறுதி கூறினா்.

Image Caption

விளம்பர மலருக்கான படம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.