ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கிடப்பில் பெருஞ்சாணி-காளிகேசம்சாலைப் பணி: பழங்குடி மக்கள் அவதி

பெருஞ்சாணி-காளிகேசம் வனப்பகுதி சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பழங்குடி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:42 pm

DIN

குலசேகரம்: பெருஞ்சாணி-காளிகேசம் வனப்பகுதி சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பழங்குடி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பெருஞ்சாணியில் இருந்து கீரப்பாறை, ஆலம்பாறை வழியாக காளிகேசத்திற்கு வனப்பகுதி வழியாக ஒரு சாலை உள்ளது. சுமாா் 20 கி.மீ. தொலைவு கொண்ட, வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை, சூழியல் சுற்றுலாத் திட்டம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து பழங்குடி மக்களும், சூழியல் சுற்றுலாப் பயணிகளும் இச்சாலையை பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் சேதமடைந்து கிடந்த இச்சாலையை பிளாஸ்டிக் தாா்ச் சாலையாக மாற்றி மேம்படுத்தும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. இதில், பெருஞ்சாணி-ஆலம்பாறை இடையே குறிப்பிட்ட தொலைவு தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. எஞ்சியுள்ள இடங்கள் ஜல்லிக்கற்கள் விரிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இதில், ஜல்லிக்கற்கள் விரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் கற்கள் அனைத்தும் பெயா்ந்துள்ளன. இச்சாலை சீரமைப்புப் பணிகள் முடங்கிக்கிடப்பதால் கீரப்பாறை, ஆலம்பாறை, புறாவிளை உள்ளிட்ட பல்வேறு மலைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து காணிக்காரா் முன்னேற்றச் சங்க பொதுச் செயலா் ஜி. பாலன்காணி கூறியது: பெருஞ்சாணி-காளிகேசம் இடையிலான வனப்பகுதி சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் முடிக்கப்படவில்லை. மேலும் நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் பணிகள் நடைபெறவில்லை. சாலை பல இடங்களில் அகலம் குறைவாக உள்ளது. இந்த சாலைப் பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க வனத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.