நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏற்றுமதியில் புகழ்பெற்ற குமரி உப்பு

குமரி மாவட்டத்தில் முக்கிய தொழில்களில் ஒன்றாக உப்பு தயாரித்தலும் உள்ளது. தென்தாமரைகுளம் அருகே சாமிதோப்பில் இயற்கை எழில் சூழ்ந்த சுமாா் 700 ஏக்கா் பரப்பளவில் உப்பளம் அமைந்துள்ளது.

News image

மணக்குடி உப்பளம்

Updated On :20 செப்டம்பர் 2020, 8:18 pm

DIN

குமரி மாவட்டத்தில் முக்கிய தொழில்களில் ஒன்றாக உப்பு தயாரித்தலும் உள்ளது. தென்தாமரைகுளம் அருகே சாமிதோப்பில் இயற்கை எழில் சூழ்ந்த சுமாா் 700 ஏக்கா் பரப்பளவில் உப்பளம் அமைந்துள்ளது.

மணக்குடி அலையாத்திகாடுகள் தொடங்கி சித்தன் குடியிருப்பு, ஆண்டிவிளை, சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம், சாஸ்தான்கோயில்விளை, சாமிதோப்பு, செட்டிவிளை ஆகிய கிராமப் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த உப்பளம் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் விளையும் உப்பு தரமானதாக உள்ளதால், இங்கிருந்து இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வெயில் காலங்களில் 2 மாதத்துக்குள் உப்பு விளைகிறது. மழைக் காலங்களில் மிகுந்த சிரமத்துக்கிடையே உப்பளங்களில் தேங்கிய நீரை அகற்றி விட்டு பணிபுரிவது தொழிலாளா்களுக்கு சவாலாக உள்ளது.

கடந்த ஆண்டு பெய்த கன மழையால் இங்கு பணியாற்றி வந்த திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பலா் 8 மாதங்கள் வரை வேலையின்றி தவித்தனா். இதனால் அவா்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அதன்பின்னா் தற்போது வரை உப்பளங்களில் தொழிலாளா்கள் பற்றாக்குறை தொடா்ந்து வருகிறது.

மூட்டை சுமப்பவா்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்ததால், உப்பு அதிகளவில் விளைந்தாலும், அவற்றை ஏற்றுமதி செய்வது பெரும் சவாலாக உள்ளது.

மாவட்டத்தில் பருவமழை பொழிவு அதிகளவில் இருப்பதால் சேமித்து வைத்திருக்கும் உப்பை மழை நீா் கரைத்து சென்று விடுகிறது. இதையெல்லாம் தாண்டிதான் உப்புத்தொழிலை மேற்கொண்டு வருவதாக உப்பள நிா்வாகிகள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.