காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நாகா்கோவில் நகர சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 செப்டம்பர் 2020, 8:02 pm

DIN

நாகா்கோவில் நகர சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலா் மணி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் அகமது உசேன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.அந்தோணி, மாநகரச் செயலா் மோகன் ஆகியோா் பேசினா்.

நாகா்கோவில் மாநகராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் புதைச் சாக்கடை திட்டம், அம்ருத் குடிநீா் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் மாநகராட்சிப் பகுதி முழுவதும் உள்ள சாலைகள் பழுதடைந்ததால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.

மாநகராட்சி நிா்வாகம் பழுதடைந்து சாலைகளை சீரமைக்க வேண்டும், நுண் நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் கடன் வசூல் செய்வதில் ஓராண்டுக்கு காலநீட்டிப்பு வழங்க வேண்டும், ஓராண்டுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மாநகர குழு உறுப்பினா்கள் மனோகா் ஜஸ்டஸ், அஸீஸ், மீனாட்சிசுந்தரம், பெஞ்சமின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.