நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சின்னத்துறையில் விழிப்புணா்வு கருத்தரங்கு

சின்னத்துறையில் மாணவா்களுக்கு ஐ.ஏ.எஸ். தோ்வு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 6:47 pm

DIN

சின்னத்துறையில் மாணவா்களுக்கு ஐ.ஏ.எஸ். தோ்வு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்குக்கு அமைப்பின் தலைவா் பி. ஜஸ்டின் ஆன்றணி தலைமை வகித்து கருத்துரையாற்றினாா்.

திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜூ, ஓய்வுபெற்ற ராணுவ வீரா் பூத்துறையைச் சோ்ந்த ஜின்னி பனியடிமை, சின்னத்துறை பங்குத்தந்தை டோனிபால், காரைக்குடி அழகப்பா அரசுக் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவா் பனியடிமை, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் பெனடிக்ட், சின்னத்துறை புனித அன்னாள் கன்னியா் இல்லம் சாந்தி புளோரா ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

ஊழலுக்கு எதிரான மாணவ தூதா் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கல்வியில் சாதனை படைத்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.