நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளியாடி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் பாதிப்பு

கருங்கல் அருகே பள்ளியாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 6:57 pm

DIN

கருங்கல் அருகே பள்ளியாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கருங்கல் துணை மின்நிலையத்திற்குள்பட்ட பள்ளியாடி மின்வாரிய அலுவலக பகுதிகளான நட்டாலம், சுண்டவிளை, நேசா்புரம், ஈழத்துவிளை, கழுகாணிவிளை, பள்ளியாடி, வாகவிளை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

குறிப்பாக, சுண்டவிளை மின்மாற்றியிலிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளான சுண்டவிளை, கழுகானிவிளை, சானல்கரை பகுதிகளில் சனிக்கிழமை மாலை முதல் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் தடையின்றி மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.