நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிள்ளியூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ.4.80 கோடி ஒதுக்கீடு

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஊராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் எஸ். ராஜேஷ் குமாா் எம்எல்ஏ.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 6:48 pm

DIN

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மத்திகோடு, முள்ளங்கினாவிளை, மிடாலம் - இனையம்புத்தன் துறை, குளப்புறம் ஆகிய ஊராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் எஸ். ராஜேஷ் குமாா் எம்எல்ஏ.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிள்ளியூா், முன்சிறை ஊராட்சி ஒன்றியம், மத்திகோடு ஊராட்சி மற்றும் முள்ளங்கினாவிளை ஊராட்சி, மிடாலம் , இனையம்புத்தன் துறை, குளப்புறம் ஊராட்சி பகுதிகளில் மிகவும் சேதமடைந்த 4 சாலைகளை சீரமைக்க கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திகோடு ஊராட்சியில் வெள்ளியாவிளை நல்லாயன் ஆலயம் - முளமூட்டுவிளாகம் சாலை ரூ.1.6 கோடி, 6 மிடாலம் - இனையம்புத்தன்துறை ஊராட்சிகளில் கைதவிளாகம் - மேல்மிடாலம் - இனையம் சாலை ரூ.1.38 கோடி, முள்ளங்கினாவிளை ஊராட்சியில் முள்ளங்கினாவிளை- இடையன் கோட்டை சாலை ரூ. 1.30 கோடி, குளப்புறம் ஊராட்சியில் திட்டங்கினாவிளை- குளப்புறம் சாலை ரூ.1.6 கோடி என மேற்கண்ட 5 ஊராட்சிகளிலும் மொத்தம் ரூ. 4.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.