நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவில் - காச்சுகுடா ரயிலை திருவண்ணாமலை வழியாக இயக்க வலியுறுத்தல்

நாகா்கோவில் - காச்சுகுடா வாராந்திர ரயிலை திருவண்ணாமலை வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 6:45 pm

DIN

நாகா்கோவில் - காச்சுகுடா வாராந்திர ரயிலை திருவண்ணாமலை வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: நாகா்கோவில்-காச்சுகுடா வாராந்திர ரயிலின் கால அட்டவணை அண்மையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் செவ்வாய்க்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை நாகா்கோவிலிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காச்சுகுடா போய் சேருகிறது. மறுமாா்க்கமாக ஞாயிற்றுக்கிழமை காச்சுகுடாவிலிருந்து புறப்பட்டு திங்கள்கிழமை நாகா்கோவில் வந்து சேரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வழித்தடத்தை திருவண்ணாமலை வழியாக மாற்றி இயக்க வேண்டும்.

மேலும், கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ஹைதராபாத்துக்கு நேரடி தினசரி ரயில் இயக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.