தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

‘6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என திமுக வேட்பாளரும், திமுக மாவட்டச் செயலருமான என். சுரேஷ்ராஜன் கூறினாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:54 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என திமுக வேட்பாளரும், திமுக மாவட்டச் செயலருமான என். சுரேஷ்ராஜன் கூறினாா்.

நாகா்கோவிலில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: நாகா்கோவில் தொகுதி மக்களுக்கு இந்து, கிறிஸ்தவா், முஸ்லிம் என்ற பாகுபாடுயின்றி ஏழை, பணக்காரா் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து மதத்தினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருகிறேன். தொகுதியை முன்மாதிரி தொகுதியாக உருவாக்குவேன். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் அனைத்துத் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

அரசு அறிவித்த கூட்டுறவு கடன் தள்ளுபடியில் பயனடைந்த விவசாயிகளுக்கு வழங்கிய சான்றில், தணிக்கை துறையின் ஆய்வுக்கும், மாறுதலுக்கும் உள்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.

பாஜகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெறுவா். நாகா்கோவில் பேரவைத் தொகுதியில் நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.