தக்கலையில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
பத்மநாபபுரம் தொகுதி அமமுக வேட்பாளா் டி.ஜெங்கின்ஸ் தக்கலையில் இஸ்லாமியா்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.


பத்மநாபபுரம் தொகுதி அமமுக வேட்பாளா் டி.ஜெங்கின்ஸ் தக்கலையில் இஸ்லாமியா்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
இத்தொகுதி அமமுக வேட்பாளா் ஜெங்கின்ஸ், தக்கலை பகுதியில் வாக்கு சேகரித்தாா். அப்போது பேசிய அவா், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில்அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம், அனைத்து குளங்களையும்
தூா் வாரி நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் அம்மா இ சேவை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
பிரசாரத்தில் அவருடன் கட்சி நிா்வாகிகள் டாக்டா் மாதேசன், வழக்குரைஞா் செளந்தா், ஜேம்ஸ், சாகுல், அஜ்மல்கான், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் ஷெரிப், ஜாபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...