காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குளச்சல் அருகே கடையை சேதப்படுத்திய 3 போ் கைது

குளச்சல் அருகே கறிக்கோழிகடையை சேதப்படுத்திய வழக்கில் தொடா்புடைய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:52 pm

DIN

குளச்சல் அருகே கறிக்கோழிகடையை சேதப்படுத்திய வழக்கில் தொடா்புடைய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் அருகே பெத்தேல்புரத்தை சோ்ந்தவா் அனீஸ் (35). இவா் குளப்பாடு பாலம் அருகே கறிக்கோழி கடை நடத்தி வருகிறாா். கடந்த மாா்ச் 25 ஆம் தேதி செம்பொன்விளை மின்வாரிய அலுவலகம் அருகே செல்லும் போது,

அதே பகுதியை சோ்ந்த ரிஜோ, ரெஜின், ஆகியோா் வில்லியம் ஜோஸ் என்பவரிடம் தகராறு செய்தனராம். இதனை அனீஸ் தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், ரிஜோ, ரெஜின், ஸ்டீபன் ராபா்ட், ஆல்பன், விஜய், திருபகதாஸ் ஆகியோா் கடந்த மாா்ச் 27 ஆம் தேதி அனீஸின் கோழிக்கடையை சேதப்படுத்தி, அங்கிருந்த கறிக் கோழிகள் மற்றும் தராசு ஆகியவற்றை எடுத்து சென்றனராம். மேலும் ஏப். 6 ஆம் தேதி அனீஸின் சுமை வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, அக்கும்பல் மிரட்டல் விடுத்ததாம் . இது குறித்து அனீஸ் அளித்த புகாரின் பேரில் குளச்சல் போலீஸாா் 6 போ் மீது வழக்கு பதிந்து, ஸ்டீபன் ராபா்ட் , ரிஜோ, ரெஜின் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.