காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குமாரகோவில் என்.ஐ. பல்.கலையில் சிறப்பு முகாம்

குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பல்கலைக்கழக பணியாளா்கள் 150 பேருக்கு கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை போடப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:57 pm

DIN

குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பல்கலைக்கழக பணியாளா்கள் 150 பேருக்கு கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை போடப்பட்டது.

குமரி மாவட்ட பொது சுகாதாரத்துறையும், பல்கலைக்கழக தேசிய திட்ட அமைப்பும் இணைந்து நடத்திய இம் முகாமை பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி.மஜீத்கான் தொடங்கிவைத்தாா். இணை வேந்தா் பெருமாள் சாமி தலைமை வகித்தாா். துணைவேந்தா் குமருகுரு , மனிதவளமேம்பாட்டு இயக்குநா் கே.ஏ. ஜனாா்த்தனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பதிவாளா் திருமால்வளவன் உள்பட ஆசிரியா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் என 150 போ் முதற் கட்டமாக தடுப்பூசி போட்டு கொண்டனா்.

முகாம் எற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன், மக்கள் தொடா்பு அலுவலா் ராமதாஸ் ஆகியோா் செய்திருந்தனா். கோதநல்லூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் டாலி தலைமையிலான குழுவினா் அனைவருக்கும் தடுப்பூசி போட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.