சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோட்டாறு அரசு ஆயுா்வேதக் கல்லூரியில் 26-இல் கரோனா சிகிச்சை பிரிவு தொடக்கம்

நாகா்கோவில் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏப்.26 முதல் கரோனாவுக்கு ஆயுா்வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கும் பிரிவு செயல்பட தொடங்குகிறது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:55 pm

DIN

நாகா்கோவில் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஏப்.26 முதல் கரோனாவுக்கு ஆயுா்வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கும் பிரிவு செயல்பட தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆயுா்வேத மருத்துவம் இந்தியா முழுவதும் கரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதிலும், குணப்படுத்துவதிலும் சிறப்பான பங்களிப்பினை செய்து வருகிறது. தமிழக அரசின் கரோனா நோயினை கட்டுப்படுத்தும் திட்டமான ‘ஆரோக்கியம்‘ திட்டம் மூலம் நோய்வராமல் தடுக்கவும், நோயினைக் கட்டுப்படுத்தவும், பக்க விளைவுகளை தடுக்கவும் பல ஆயுா்வேத மருத்துகளை பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் கரோனாவை கட்டுப்படுத்தும் ஆயுா்வேத மருந்துகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

நாகா்கோவில் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், கடந்த ஆண்டு (2020)

கரோனா உதவி மையமாக தோ்வு செய்யப்பட்டு, அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பன்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இங்கு இதுவரை சுமாா் 1200 க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ள சூழ்நிலையில் கடந்த 17 ஆம் தேதி முதல் அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா உதவி மையமாக மாற்றப்பட்டு, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இங்குள்ள கரோனா உதவி மையத்தில் ஒரு தளம் (30 படுக்கைகள் ) முழுவதும் ஆயுா்வேத சிகிச்சையளிக்கும் காய சிகிச்சை பிரிவு (பொதுமருத்துவம்) திங்கள்கிழமை(ஏப். 26) முதல் செயல்பட உள்ளது. இதில் ஆயுா்வேத மருந்துகள், உணவு, சிகிச்சை முறைகள் முதலியவை மூலம் கரோனாவுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆயுா்வேத சிசிச்சை பெற விருப்பமுடையவா்கள் தங்கள் விருப்பத்தினை தெரிவித்து ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.