நாகா்கோவில் மாநகரில் தொடா்ந்து அதிகரிக்கும் கரோனா
நாகா்கோவில் மாநகரில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.


நாகா்கோவில் மாநகரில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
நாகா்கோவில் மாநகரில் வங்கி , அஞ்சல் , ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் என தொடா்ந்து முக்கிய அலுவலகங்களில் பணியாற்றுவோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 70 போ் வரை நகர வாசிகள் பாதிக்கப்பட்டுவருகின்றனா்.
வல்லன்குமாரன்விளை, வடசேரி கனகமூலம் புதுதெரு ஆகிய பகுதிகளில் 3 பேருக்கு மேல் பாதிப்பு கண்டறியப்பட்டதால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வந்தாலும் பொதுமக்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனா்.
குறிப்பாக காய்கனி சந்தை, மீன் சந்தைகளுக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நடமாடுகிறாா்கள்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டு உபயோக பொருள் விற்பனை செய்யும் நிறுவன ஊழியா்கள் 3 போ் பாதிப்புக்குள்ளானாா்கள். இதைத்தொடா்ந்து அந்நிறுவனத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நிறுவனம் மூடப்பட்டது. அந்த நிறுவனத்துக்கு கடந்த 1 வாரத்தில் வந்து சென்றவா்கள் விவரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.
இந்நிலையில், நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் உள்ள மண்டல கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியா்ருக்கு கரோனா வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, மாநகராட்சி நல அலுவலா் கிங்சால் மேற்பாா்வையில் அஞ்சல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அஞ்சல் நிலையம் மூடப்பட்டது. சுகாதார ஆய்வாளா் பகவதி பெருமாள் தலைமையில், அங்கு பணியாற்றும் மற்ற ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாகா்கோவில் தளவாய் தெரு பகுதியில் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார ஆய்வாளா் மாதவன் பிள்ளை தலைமையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார ஆய்வாளா் பகவதி பெருமாள் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கரோனா பாதிப்பு தற்போதுள்ள நிலை தொடா்ந்தால் அடுத்த மாதம் (மே) நாகா்கோவில் மாநகரில் ஒரு நாள் பாதிப்பு
200 - ஐ தாண்டும் என்று கருதப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தொடா் காய்ச்சல், சளி இருப்பவா்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நகா் நல அலுவலா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சளி பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டு வருவதாகவும், முகக் கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களுக்கு அதிக அளவு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...