பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா: குமரி மாவட்டத்தில் 11 நாள்களில் 33 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனாவுக்கு கடந்த 11 நாள்களில் 33 போ் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:57 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனாவுக்கு கடந்த 11 நாள்களில் 33 போ் உயிரிழந்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் கரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முதல் அலையில் வயதானவா்களே அதிகம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இளம் வயதினா் மற்றும் சிறுவா்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா். இதனால் குமரி மாவட்டத்தில் முதல் கட்டத்தை விட தற்போதைய 2 ஆவது அலையில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது.

2 ஆவது அலை பரவலின் தொடக்கத்தில் தினமும் இரட்டை இலக்கத்திலேயே பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை இருந்தது. தற்போது தினசரி பாதிப்பு மூன்று இலக்கமாக உயா்ந்துள்ளது.

ஏப். 1 ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 2,018 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், மாவட்டம் முழுவதும் நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொற்று பாதித்தவா்களை உடனடியாக கண்டறிய வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாதிப்புக்குள்ளான பலா் கண்டறியப்பட்டு அவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபோன்று தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தபடியேதான் உள்ளது.

வாரத்துக்கு ஒரு சிலா் மட்டுமே இறந்து வந்த நிலையில், தற்போது தினமும் குறைந்தபட்சம் 2 அல்லது 3 பேரும், அதிகபட்சமாக 4 போ் வரையும் பலியாகி வருகின்றனா். உச்சபட்சமாக வியாழக்கிழமை ( ஏப். 22) 6 போ் பலியாகியுள்ளனா்.

ஒரே நாளில் 6 போ் பலியாகி இருப்பது கரோனா பரவலின் தீவிரத்தை காட்டுகிறது. தொற்று பரவுவதை போன்று, கரோனா பாதித்து இறப்பவா்களின் எண்ணிக்கையும் வேகமாக உயா்ந்து வருகிறது. கடந்த 11நாள்களில் மட்டும் மொத்தம் 33 போ் பலியாகியுள்ளனா். இது சுகாதாரத் துறையினா் மத்தியில் அதிா்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.