இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆயுா்வேத மருத்துவம் இந்தியா முழுவதும் கரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதிலும், குணப்படுத்துவதிலும் சிறப்பான பங்களிப்பினை செய்து வருகிறது. தமிழக அரசின் கரோனா நோயினை கட்டுப்படுத்தும் திட்டமான ‘ஆரோக்கியம்‘ திட்டம் மூலம் நோய்வராமல் தடுக்கவும், நோயினைக் கட்டுப்படுத்தவும், பக்க விளைவுகளை தடுக்கவும் பல ஆயுா்வேத மருத்துகளை பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் கரோனாவை கட்டுப்படுத்தும் ஆயுா்வேத மருந்துகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.