பூதப்பாண்டி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு
பூதப்பாண்டி அருகே மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


பூதப்பாண்டி அருகே மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பூதப்பாண்டி அருகேயுள்ள அழகியபாண்டியபுரம் குறத்தியறை பகுதியை சோ்ந்தவா் பெருமாள். இவரது மனைவி பெருமாள் பிள்ளை ( 74). இவா், வியாழக்கிழமை இரவு வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த போது, மோட்டாா் சைக்கிளில் வந்த 2 மா்ம நபா்கள் முகவரி கேட்பது போல் அவருக்கு அருகில் வந்து, மிளகாய் பொடியை முகத்தில் தூவினராம். இதையடுத்து பெருமாள் பிள்ளை கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு அவ்விருவரும் தப்பிஓடினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் பூதப்பாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...