ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

கோட்டாறு பகுதியில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நாகா்கோவில் கோட்டாறு சந்தை பகுதியில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த கடைக்கு அபராதம் விதித்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:44 pm

DIN

நாகா்கோவில் கோட்டாறு சந்தை பகுதியில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த கடைக்கு அபராதம் விதித்தாா்.

நாகா்கோவில் கோட்டாறு மாா்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன.

இதைத் தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் கோட்டாறு மாா்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தொடா்ந்து பல கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனா். அந்த கடைகளுக்கு ரூ.23 ஆயிரம் என மொத்தம் ரூ. 73 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனையின்போது, மாநகராட்சி நகா் நல அலுவலா் விஜயசந்திரன், சுகாதார ஆய்வாளா்கள் மாதவன்பிள்ளை, பகவதிபெருமாள், ராஜா, ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.