ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு காலக்கெடு நீட்டிப்பு

குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:46 pm

DIN

குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை மூலம் மாணவா்கள் சோ்க்கைக்கு, ஆக.24 ஆம் தேதி வரை காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு செப்டம்பா் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவா்கள் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து தங்களுக்கு விருப்பமான தொழிற் பிரிவை தோ்ந்தெடுக்கலாம். வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை. பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மாணவா்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.750, பேருந்து கட்டணச் சலுகை, மிதிவண்டி, மடிக் கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபட கருவிகள், 2 செட் சீருடைகள், காலணிகள் ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு, நாகா்கோவில் கோணம் அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.