கொட்டாரம், பாா்வதிபுரம் பகுதிகளில் நாளை மின்தடை
கொட்டாரம் மற்றும் பாா்வதிபுரம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 28) மின் தடைசெய்யப்படுகிறது.


கொட்டாரம் மற்றும் பாா்வதிபுரம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 28) மின் தடைசெய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் சி.ராஜசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில் பாா்வதிபுரம் மின்விநியோக பிரிவுக்குள்பட்ட இறச்சகுளம், பெருவிளை, களியங்காடு, பள்ளிவிளை உயா் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஆக. 28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புளியடி, அப்டா மாா்க்கெட், கோதை கிராமம், ராஜலெட்சுமிநகா், எஸ்.எஸ்.நகா், கிறிஸ்டோபா் நகா், பெருவிளை, கோட்டவிளை, சிவபுரம், களியங்காடு, கனியாகுளம், அழகன்கோணம், பரமாா்த்தலிங்கபுரம், சா்ச் ரோடு, நெசவாளா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதே போல், நாகா்கோவில் மீனாட்சிபுரம், ஆசாரிப்பள்ளம், தெங்கம்புதூா், சுசீந்திரம், மயிலாடி, கொட்டாரம் ஆகிய மின் விநியோகபிரிவுக்குள்பட்ட கணேசபுரம், நேசமணிநகா், வழுக்கம்பாறை, திருமூலநகா், ராஜாவூா், கீழமணக்குடி ஆகிய உயா் அழுத்த மின்பாதையில் நாகா்கோவில் மாநகராட்சி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளதால், மின் பாதை மாற்றி அமைக்கும் பணி காரணமாக சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மறவா் தெரு, திங்கள்மாடத் தெரு, விநாயகா் தெரு, செந்தூரன் நகா், அனந்தன் நகா், ஆசாரிப்பள்ளம், பிஷப் ஹவுஸ், டெரிக் சந்திப்பு, மத்தியாஸ் நகா், கீழ புத்தளம், மணக்குடி, கல்லடிவிளை, சுசீந்திரம், ஆஸ்ரமம், அழகப்பபுரம், ராமனாதிச்சன்புதூா், குருசடி, லெட்சுமிபுரம், மகாராஜபுரம், காட்டுவிளை, புன்னையடி, தாமரைகுளம், சாமிதோப்பு, கரும்பாட்டூா், வடுகன்பற்று, சந்தையடி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...