முகநூலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
பெண்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கத்தில் பதிவு செய்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.


பெண்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கத்தில் பதிவு செய்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குமரி மாவட்டத்தில் 2 இளம்பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கங்களில் பதிவு செய்த காஞ்சாம்புறம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (26) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதைத் தொடா்ந்து அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத்ததன் பேரில் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் உத்தரவிட்டாா்.
இதையடுத்து போலீஸாா், சுரேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...