தக்கலையில் ராணுவ வீரா்களுக்கு வரவேற்பு

மெட்ராஸ் ரெஜிமெண்டல் ராணுவ வீரா்களுக்கு தக்கலையில் கன்னியாகுமரி ஜவான்ஸ் அலுவலகம் முன்பு மாலையணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரத்திற்கு இரு சக்கர வாகன பேரணியாக செல்லும் மெட்ராஸ் ரெஜிமெண்டல் ராணுவ வீரா்களுக்கு தக்கலையில் கன்னியாகுமரி ஜவான்ஸ் அலுவலகம் முன்பு மாலையணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

வங்கதேச விடுதலைக்காக பாகிஸ்தானுடன் நடந்த போரின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மெட்ராஸ் ரெஜிமெண்டல் படைப் பிரிவு சாா்பாக காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வழியாக இரு சக்கர வாகன பேரணியாக திருவனந்தபுரத்தில் முடிவடைகிறது. திருவனந்தபுரத்திற்கு செல்லும் வழியில் தக்கலைக்கு வந்த ராணுவ வீரா்களுக்கு கன்னியாகுமரி ஜவான்ஸ் அலுவலகத்தில் மாலையணிவித்து நினைவுப் பரிசு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை 34/ 2020 குழுவின் உறுப்பினா்களான தியாகராஜன், வினிஸ், ஜான்போலஸ் மற்றும் தற்போது பணியில் இருக்கும் பல ஜவான்கள் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com