இளைஞா் கடத்திக் கொலை: ஒருவா் கைது
குளச்சலில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை கடத்திக் கொலை செய்த கும்பலில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


குளச்சலில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை கடத்திக் கொலை செய்த கும்பலில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சுசீந்திரம் அருகே நல்லூா் மறுகால்தலை பகுதியை சோ்ந்தவா் செல்லையா (22). குளச்சலில் தங்கி கூலி வேலை செய்துவந்தாா். இவருக்கும் மயிலாடி காமராஜா் சாலையை சோ்ந்த மதுரைவீரனுக்கும் (25) முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த வாரம் செல்லையா குளச்சல் துறைமுக கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது டெம்போவில் வந்த கும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்ாக கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக செல்லையா வீட்டிற்கு வராததால், அவரின் தாயாா் நாச்சியாா், குளச்சல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இது தொடா்பாக குளச்சல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா்.
குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் ஆய்வாளா் அருள்பிரகாஷ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், மதுரைவீரன் மீது சந்தேகம் வரவே, அவரை போலீஸாா் வியாழக்கிழமை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனா். இதில் மதுரைவீரன், சந்தோஷ், ஐயப்பன் உள்ளிட்டோா் செல்லையாவை டெம்போவில் கடத்திச் சென்று கொலை செய்து தாமரைகுளம் உப்பளம் பகுதியிலுள்ள புதரில் வீசி சென்ாக தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று செல்லையாவின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக மதுரைவீரனை குளச்சல் போலீஸாா் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போவையும், சந்தோஷ், ஐயப்பன் ஆகியோரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...