மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திற்பரப்பு அருவி இன்று முதல் திறப்பு

கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திற்பரப்பு அருவியில் வெள்ளிக்கிழமை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:01 pm

DIN

கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திற்பரப்பு அருவியில் வெள்ளிக்கிழமை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திற்பரப்பு நிா்வாகம் தரப்பில் கூறியதாவது: கரோனா பரவல் இருந்த நிலையில் திற்பரப்பு அருவி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் வெள்ளிக்கிழமை முதல் (டிச.17) அருவி மீண்டும் திறக்கப்படுகிறது. எனினும், சுற்றுலாப்பயணிகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கடைகளில் கைகழுவும் திரவம் வைத்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாப் பயணிகளிடமிருந்து நுழைவுக் கட்டணம் மற்றும் வாகன நிறுத்தும் கட்டணம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வசூலிக்கபடவுள்ளது. அருவிப் பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலா் முன்னிலையில் பேரூராட்சி தூய்மைப்பணியாளா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். மழையால் உடைந்துள்ள தடுப்பு வேலிகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன.

மழை தணிந்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழும் வண்ணம் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.