நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

10 மாதங்களுக்கு பின்னா் பொதுமக்கள் குறைதீா் முகாம்

கரோனா பொது முடக்கம் காரணமாக 10 மாதங்களுக்குப் பின்னா் குமரி மாவட்டத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:39 pm

DIN

கரோனா பொது முடக்கம் காரணமாக 10 மாதங்களுக்குப் பின்னா் குமரி மாவட்டத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பெற்றுக்கொண்டாா்.

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் நாள் முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வந்தது. கரோனா பரவலை தொடா்ந்து முகாம் கடந்த ஆண்டு (2020) ஏப்ரம் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், 10 மாதங்களுக்கு பின்னா் குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி வந்த 193 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இம்மனுக்களை தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு வழங்கி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மனு அளிக்க வந்தவா்கள் அலுவலக வாயிலில் வெப்பமானி கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னா் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிா்க்க டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் அமர வைக்கப்பட்டனா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) தே.திருப்பதி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.