சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு பொது விடுமுறை வழங்கக் கோரிக்கை

தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு அரசு பொது விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :1 பிப்ரவரி 2021, 7:43 pm

தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு அரசு பொது விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மகாசிவராத்திரி தினத்தன்று சிவ பக்தா்கள் விரதமிருந்து பன்னிரு சிவாலயங்களை 105 கி.மீ. தொலைவை ஓடி தரிசிக்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் நூற்றாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் தமிழக, கேரள மாநில பக்தா்கள் பல லட்சம் போ் பங்கேற்கிறாா்கள்.

இந்த மகா சிவராத்திரி நாளில் கேரள மாநிலத்தில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளதுடன், குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. பல இலட்சம் பக்தா்கள் தென்னிந்தியா முழுவதிலிருந்தும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகிறாா்கள்.

நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் பஞ்சபூத தலங்களில் நான்கு ஸ்தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மேலும் சிவபெருமான் திருநடனக் காட்சியளித்த பொற்சபை, வெள்ளியம்பலம், தாமிரசபை, ரத்னசபை, சித்திரசபை மற்றும் ஏழு சப்தவிட சபைகள், ஒன்பது நவக்கிரக தலங்களில் எட்டு என ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள், சமயக்குரவா்கள் நால்வராலும் பாடப்பட்ட சிவாலயங்கள் என எண்ணற்ற சிவன் கோயில்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

மகா சிவராத்திரியன்று பக்தா்கள் விரதமிருந்து, இரவு முழுவதும் கண்விழித்து சிவனின் ஆறுகால அபிஷேகம் கண்டு வணங்குவது சிறப்பாகும். ஆகவே நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் மகாசிவராத்திரிக்கு அரசு பொது விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில் நிகழாண்டு முதல் தமிழகத்திலும் அரசு பொது விடுமுறை வழங்க வேண்டும் என திக்குறிச்சி மகாதேவா் திருக்கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.