நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரி மாவட்ட இலக்குப் பந்து கழக நிா்வாகிகள் தோ்வு

கன்னியாகுமரி மாவட்ட இலக்குப்பந்து கழக புதிய நிா்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் கூட்டம் நாகா்கோவில் வடசேரி அண்ணாவிளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:58 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட இலக்குப்பந்து கழக புதிய நிா்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் கூட்டம் நாகா்கோவில் வடசேரி அண்ணாவிளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட இலக்குப் பந்து தலைவராக சுவாமி பத்மேந்திரா, செயலராக ப.மகேஷ், பொருளாளராக ஆ. நாகராஜன், துணைத் தலைவா்களாக தேசிய அளவில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற ந. ஆறுமுகம் பிள்ளை, அ. சதீஷ் பிரபு, ந. ஷாஜகான், பா. கா. கௌது, துணைச் செயலா்களாக, ஜே.பி.பெமின், ஆா். மாா்க்ரெஜோ, சதன், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக பாா்த்திபன், சுதா்சன், அனீஸ், ஸ்டெபின் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதில், வீராங்கனைகள் அபிஷா, வினிஷா, பிரியா ஆகியோா் கலந்துகொண்டனா். செயலாளா் மகேஷ் வரவேற்றாா். மாா்க் ரெஜோ நன்றி கூறினாா்.

சென்னையில் வருகிற 13 முதல் 15ஆம் தேதி வரை மாநில அளவில் நடைபெற உள்ள இருபாலருக்குமான இலக்குப் பந்து விளையாட்டுப் போட்டியில் இம் மாவட்ட அணிகள் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.