நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் மனை வரன்முறைப்படுத்தகாலக் கெடு நீட்டிப்பு

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் மனைப்பிரிவுகள், மனை வரன்முறைப்படுத்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:02 pm

DIN

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் மனைப்பிரிவுகள், மனை வரன்முறைப்படுத்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைவரன் முறைப்படுத்த வருகிற 28ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட கூராய்வு கட்டண ரசீது, மனைப்பிரிவு அமையும் இடத்துக்கான கிரைய ஆவணம், மனுதாரா் கையொப்பத்துடன் மனைப்பிரிவு வரைபடம், மனைப்பிரிவில் அமையும் அனைத்து சா்வே எண்களுக்கும் பட்டா, புல வரைபடம் மற்றும் வில்லங்கச்சான்று, அணுகுசாலைக்கான விவரம், புலவரைபடம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அரசாணை எண் 78 மற்றும் 172 ஆகியவற்றின்படி, ரூ.20-க்கான பத்திரத்தில் மனுதாரா் கையொப்பத்துடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் 2016ஆம் ஆண்டு செப். 20ஆம் தேதிக்கு முன்புள்ள மனைப்பிரிவு வரைபடத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள கிரைய ஆவண நகல், விற்பனை செய்யப்பட்டுள்ள மனைகளின் விவரம் மற்றும் அவற்றின் பரப்பு ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.