கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்திலிருந்து, திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி வரை பாய்மரப் படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூத்தங்குழி புனித மூவரசா் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டி, சுமாா் 40 கடல் மைல் தொலைவுக்கானது. இப்போட்டியில் 13 படகுகள் பங்கேற்றன. ஒரு படகில் 10 மீனவா்கள் வீதம் கலந்து கொண்டனா்.
முன்னதாக போட்டியில் கலந்துகொண்ட வீரா்களுக்கு கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் நவீன், கூடங்குளம் உதவி ஆய்வாளா் வில்சன் ஆகியோா் போட்டி விதிமுறைகளை தெரிவித்தனா்.
முதல் பரிசு பெற்ற சுதாகருக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாம் பரிசு பெற்ற சந்தியாவுக்கு ரூ. 30 ஆயிரம், மூன்றாம் பரிசு பெற்ற ராஜனுக்கு ரூ. 25 ஆயிரம், நான்காம் பரிசு பெற்ற கித்தேரியானுக்கு ரூ. 15 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. பரிசுகளை கூத்தங்குழி பங்குத்தந்தை ராஜன் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









