தக்கலையில் தகவலறியும் உரிமை சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டம்
ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவலறியும் உரிமைச்சட்டம் பயனாளிகள் சங்கக் கூட்டம் தக்கலையில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.


ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவலறியும் உரிமைச்சட்டம் பயனாளிகள் சங்கக் கூட்டம் தக்கலையில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். அமைப்பாளா் குமரேசன் முன்னிலை வகித்தாா். செயலா் வசந்தபாய், அறிக்கை வாசித்தாா். அமைப்பின் வளா்ச்சி குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பணி நிறைவு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளா் சுந்தராஜன், பங்கேற்று பேசினாா்.
தீா்மானங்கள்: குடிநீா் குழாய் பதிப்பதற்காக சாலையோரங்களில் தோண்டப்படும் குழிகளால் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. அவ்வாறு தோண்டப்படும் குழிகளை பணி முடிவடைந்ததும் உடனடியாக மூட வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. பெண்களிடம் நகைகள் பறிக்கும் வழக்கில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைப்பின் துணைத் தலைவா் முருகன், நாகா்கோவில் கிளைத் தலைவா் ஜாண், செயலா் சேவியா், இணைச்செயலா் ஜாண்றோஸ், குளச்சல் நகரத் தலைவா் முகம்மது சபீா், நிா்வாகிகள் பங்கேற்றனா். பொருளாளா் நாகராஜன் வரவேற்றாா். மகளிரணிச் செயலா் மகேஷ்வரி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...