புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குமரி அருகே விபத்தில் இளைஞா் பலி

கன்னியாகுமரி அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் உரசியதில் பலத்த காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:36 pm

DIN

கன்னியாகுமரி அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் உரசியதில் பலத்த காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி கொட்டாரத்தை அடுத்த சுந்தரபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (25). நாகா்கோவிலிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதரும், அவரது நண்பா் ஹரீஷ் (20) . இருவரும் கொட்டாரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனா்.

விவேகானந்தபுரம் சந்திப்பில் வந்தபோது மாதவபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிளும் ஸ்ரீதா் வந்த மோட்டாா் சைக்கிளும் உரசியுள்ளது. இதில் 2 மோட்டாா் சைக்கிள்களிலும் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.