ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெடல் தறி நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசகுளம் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் அம்சி மோகன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2021, 6:26 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெடல் தறி நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசகுளம் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் அம்சி மோகன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் இலவசமாக அரசு பெடல் தறிகள் வாங்கி துணிகள் உற்பத்தி செய்து வருகின்றனா். கைத்தறி நெசவுத் தொழில் செய்யும் நெசவாளா்கள், விசைத்தறி நெசவாளா்களுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதேபோல், பெடல் தறியில் துணிகள் உற்பத்தி செய்யும் நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.