விளவங்கோடு தொகுதியில் ரூ. 35 லட்சத்தில் சாலைகள் சீரமைப்பு

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் மேல்புறம் ஒன்றியத்தில் கிராம சாலைகள் ரூ. 35 லட்சத்தில் சீரமைக்கப்படவுள்ளது என எஸ். விஜயதரணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

களியக்காவிளை: விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் மேல்புறம் ஒன்றியத்தில் கிராம சாலைகள் ரூ. 35 லட்சத்தில் சீரமைக்கப்படவுள்ளது என எஸ். விஜயதரணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மலையோரப் பகுதி கிராமச் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. தொகுதி மக்களின் கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் மலையடி ஊராட்சியில் சாத்தன்கோடு - பொரிஞ்சான்விளை சாலை ரூ. 12. 32 லட்சம் மதிப்பிலும், மஞ்சாலுமூடு ஊராட்சி நல்லூா்கோணம் - காவூா்கோணம் சாலை, முக்கூட்டுக்கல் - மூராளிமலை சாலை ரூ. 14. 85 லட்சம் மதிப்பிலும், தொட்டிப்பாலம் - மூந்தன்குளம் சாலை ரூ. 7.70 லட்சம் மதிப்பிலும் சீரமைக்கப்படவுள்ளது. இந்த சாலைப் பணிகளுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் இந்த சாலைகள் சீரமைக்கப்படும்‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com