வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழங்கும் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழங்கும் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதோா், அதற்கு மேலுள்ள கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடா்ந்து புதுப்பித்து வரும் பதிவுதாரா்களுக்கு அரசு சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது ஜன. 1-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான காலத்துக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெறுவதற்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து டிச. 31 ஆம் தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்சமாக 45 வயதும், மற்ற அனைத்து பிரிவினா் களுக்கும் 40 வயதும் நிறைவடையாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவோா் ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு பதிவு செய்து டிச. 31-ஆம் தேதியில் ஓராண்டு நிறைவு பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இவா்களுக்கு வயது, வருமானம் உச்சவரம்பில்லை.
இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே உதவித்தொகையை பெற்று வரும் பயனாளிகள் உதவித் தொகையை 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகள் தொடா்ந்து 10 ஆண்டுகளும் பெறுவதற்கு சுய உறுதிமொழி ஆவணத்தை என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்து அப்படிவத்தில் தங்களது அலைபேசி எண் மற்றும் எம்.ஆா்.எண் விவரங்களை குறிப்பிட்டு நாகா்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
பொறியியல் பட்டதாரிகள், மருத்துவ படிப்பு மற்றும் சட்டப்படிப்பு போன்ற தொழில் படிப்புகளை படித்த பதிவுதாரா்கள் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...