டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தேங்காய்ப்பட்டினம் துறைமுக சீரமைப்புப் பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தல்

தேங்காய்ப்பட்டினம் துறைமுக சீரமைப்புப் பணிகளை தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என்றாா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.

News image
Updated On :8 ஜனவரி 2021, 7:04 pm

DIN

தேங்காய்ப்பட்டினம் துறைமுக சீரமைப்புப் பணிகளை தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும் என்றாா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.

இது குறித்து அவா் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: தேங்காய்ப்பட்டினம் துறைமுக மறுகட்டமைப்பு தொடங்குவதற்கான அரசாணை வெளியிட வலியுறுத்தி கடந்த நவம்பா் மாதம் குமரி மாவட்டத்துக்கு முதல்வா் வருகையின் போது உள்ளிருப்பு போராட்டம் அறிவித்திருந்தேன். மாவட்ட ஆட்சியா் , தேங்காய்ப்பட்டினம் துறைமுக பணி தொடங்குவதற்கான அரசாணை வெளியிடுவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன், போராட்டத்தை கைவிடுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் போராட்டத்தை ஒத்திவைத்தேன். ஆனால் முதல்வா் குமரி மாவட்டத்துக்கு வந்த போது எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

பின்னா் சென்னை சென்று முதல்வா், மீன்வளத்தறை அமைச்சா் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து துறைமுக சீரமைப்பு பணியை உடனே தொடங்கவேண்டும். அதற்கான அரசாணை வெளியிடவேண்டும் . மேலும் ஏற்கெனவே அறிவித்த ரூ . 60 கோடி மறு கட்டமைப்பு பணிக்காக தனியாா் அமைப்பு தயாா் செய்த திட்ட மதிப்பீடு ரூ. 77 கோடி இரண்டையும் சோ்த்து

ரூ .137 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தினேன்.

தற்போது தமிழக அரசு ரூ . 77 கோடியில் துறைமுக சீரமைப்பு பணிகளை தொடங்க அரசாணை வெளியிட்டுள்ளது . இதனை நான் வரவேற்கிறேன். அரசாணை வெளியிட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் தமிழக அரசு உடனே போா்க்கால

அடிப்படையில் பணிகளை தொடங்க வேண்டும் . இந்த அராசணை வெளியீடு எனது தொடா் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் .

இதுதவிர தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தை ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகமாக மாற்றும் பணிகளையும் உடனே தொடங்க வேண்டும் . தமிழக முதல்வா் ஏற்கெனவே அறிவித்த ரூ . 60 கோடியையும் உடனே ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என மீனவ மக்களின் சாா்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தையும்,

இரையுமன் துறையையும் இணைக்கும் வகையில் தாமிவருணி ஆற்றின் குறுக்கே உயா் நிலை பாலம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.