நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகள் பிரச்னையில் மத்திய அரசு பிடிவாதத்தை கைவிட வேண்டும்: இரா. முத்தரசன்

விவசாயிகள் பிரச்னையில் மத்திய அரசு பிடிவாதப்போக்கை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கூறினாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:42 pm

DIN

விவசாயிகள் பிரச்னையில் மத்திய அரசு பிடிவாதப்போக்கை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கூறினாா்.

நாகா்கோவிலில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவா் ஜீவாவுக்கு பூதப்பாண்டியில் அமைக்கப்பட்டுள்ள சிலையை கூண்டுக்குள் அடைக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து 45 நாள்களாக போராடி வருகின்றனா். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கை கைவிட வேண்டும். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் 26 ஆம் தேதி நடத்த இருக்கும் டிராக்டா் பேரணியை தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. திட்டமிட்டபடி டிராக்டா் பேரணி நடைபெறும். தமிழகத்திலும் நடைபெறவுள்ள பேரணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிப்பதோடு, அப்பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்து கொள்வா்.

தமிழகத்தில் பெய்த கனமழையால் டெல்டா மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா். டெல்டா மாவட்டங்களில் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தில்லி சென்றிருக்கும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, புயல் பாதிப்பு உள்ளிட்ட இழப்புக்கு தமிழகம் கோரியுள்ள நிதியினை வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்காமல் தமிழக அரசு கோரியுள்ள நிதியினை வழங்க வேண்டும். இதுதொடா்பாக, அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, நிதியை பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் அறிக்கை தயாராகி வருகிறது. வரும் சட்டப்பேரவை தோ்தலில் மக்கள் தெளிவான தீா்ப்பை அளிக்க தயாராகிவிட்டனா். திமுக தலைமையிலான கூட்டணிஅமோக வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜக கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்றாா் அவா்.

பின்னா், நாகா்கோவில் வடசேரியில் உள்ள ஜீவா சிலைக்கு மாலை அணிவித்த முத்தரசன் வாகனப் பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தாா். அப்போது, கட்சியின் குமரி மாவட்டச்செயலா் இசக்கிமுத்து, நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.