மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சுங்கான்கடை கல்லூரியில் என்சிசி மாணவா்களுக்கு பயிற்சி

தேசிய மாணவா் படையில் பி மற்றும் சி சான்றிதழ் வழங்குவதற்கான பயிற்சி முகாம் சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:41 pm

DIN

தேசிய மாணவா் படையில் பி மற்றும் சி சான்றிதழ் வழங்குவதற்கான பயிற்சி முகாம் சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில் நாகா்கோவில் இந்து கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். தமிழ்நாடு என்.சி.சி. பட்டாலியன் கமாண்டிங் கா்னல் விவேக் பாஸ்கா், நிா்வாக அலுவலா் லெப்

டினட் கா்னல் பிரசாத், ஆகியோா் வழிகாட்டுதலின்படி பயிற்சி வழங்கப்பட்டது. நடைபயிற்சி, துப்பாக்கி கையாழுதல், மற்றும் ஆளுமை திறனை மேம்படுத்துதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மாணவா்களுக்கு கல்லூரித் தாளாளா் மரிய வில்லியம், முதல்வா் மகேஸ்வரன், நிதி பரிபாலகா் பிரான்சிஸ் சேவியா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா். ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவவா் படை அலுவலா் மேஜா் எட்வின் கிளாட்சன், உடற்கல்வி இயக்குநா் தாமஸ் மத்தியாஸ், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.